இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இன்றைய தினமும் நாளைய தினமும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இலங்கை அதிகாரிகள்

தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ள 26 பிரதிநிதிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு, சேவைகள், சுங்க கூட்டுறவு, வர்த்தகம், பொருளாதார கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

தாய்லாந்திலிருந்து 355 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.