3 மாகாணங்களில் இன்று முட்டைகள் தலா 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சென்று முட்டைகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆனால், சந்தையில் முட்டை 55 ரூபாய்க்கு வாங்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோருவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.