தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டால் பொது சின்னம் ஒன்றை தெரிவு செய்யவுள்ளதாக ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல உயிர்தியாகங்களின் பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை குறுகிய நோக்கங்களுக்காக இல்லாமல் செய்வதற்கு ஒருபோது அனுமதிக்கப்போவதில்லை என்றும் குருசாமி சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

You missed