அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (05.01.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

தங்கவேலாயுதபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியை பெற்ற பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.