அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.