கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் போராட்ட இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார குற்றத்திற்கான இழப்பீட்டை மக்கள் மீது திணிக்கும் ரணில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.