பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதியோருக்கான திட்டங்கள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியின் முக்கிய சிக்கலைத் தீர்த்த பிறகு, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.