மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் இயங்காது

டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் பழைய போன்கள், பழைய இயங்குதளம் கொண்ட போன்கள் என சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.

android பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள், iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் மற்றும் KaiOS 2.5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் தற்போது வட்ஸ்அப் இயங்குகிறது.

எனினும், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், android 5.0 (லொலிபொப்) க்கு முன் வெளியான பதிப்புகளில் இயங்கும், android திறன்பேசிகளில் வட்ஸ்அப் நிறுத்தப்படவுள்ளது.

அதேபோல், iOS 10 மற்றும் 11 இல் இயங்கும் ஐபோன்களிலும் வட்ஸ்அப் இயங்காது.

டிசம்பர் 31க்குப் பிறகு வட்ஸ்அப் ஆதரவை பெறாத திறன்பேசிகள் கீழே தரப்பட்டுள்ளன.

இவை அடுத்த ஆண்டு முதல் புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் உட்பட எந்த புதுப்பிப்புகளையும் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.