(கலைஞர்.ஏஓ.அனல்)

கிழக்கு பிராந்திய இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஆகியோரின் அழைப்பின் பெயரில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்பவாசன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.மகேந்திரகுமார் அவர்களின் தலைமையில் நேற்று(21) இடம்பெற்றது.

வாழ்க்கைக்கான கல்வியோடு வாழ்வதற்கான கல்வியை இணைத்து செயற்படுவதற்கு ஓவியக்கலை சிறந்ததொரு கலையாகும். அதனை மாணவர்களுக்கு முறையாக வழங்கு அவர்களை எதிர்காலத்தில் சமூகத்திற்கு ஏற்றால் போல் உருவாக்கிவிட ஆற்றலும் ஆளுமைப் பண்புகளும் அதன்வழி அனுபவங்களுமே உறுதுணையாக அமையும் என்ற எண்ணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வளவாளராக உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளைச் சேர்ந்த சித்திரக்கலையை பயில்கின்ற உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் ஓவியத்துறைசார்ந்து இடர்படுகின்ற சந்தர்ப்பங்களை இனங்கண்டு அதனை எவ்வாறு இலகுவாக நிவர்த்தி செய்ய முடியும் என்பது தொடர்பாக தனது அனுபவங்களையும் ஆற்றல்களையும் இந்நிகழ்வின் போது வெளிப்படுத்தியிருந்தமை சிறப்புக்குரியது.

ஓவியக்கலை அதன் வரைதல் நுட்பங்கள், மனநிலை உணர்வுகள், அர்ப்பணிப்பு மற்றும் அத்துறை சார்ந்து மாணவர்களது முழுமையான ஈடுபாடுகள் என்பன பரீட்சையில் வெற்றியைப் பெற்றுத்தரும் என்று ஓவியர் பத்மவாசன் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததோடு, பெரும் ஆசீர்வாதமாகமும் அமையப்பெற்றதெனலாம்.

இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சித்திரப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சுந்தரலிங்கம், சித்திரப் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான அ.ஜெயவரதராஜன் மற்றும் சிறிகாந் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.