பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும்
இரத்ததான நிகழ்வு..

30/11/2018 அன்று வவுணதீவு சோதனைச் சாவடியில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களான அமரர் கணேஷ் தினேஷ்
அமரர் நிரோசன் இந்திக பிரசன்ன ஆகியோரின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு

இன்று 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் பல சிறப்பு ஏற்பாடுகளோடு இரத்த தான முகாம் இடம்பெறவிருக்கிறது.

அன்று தம் வாழ்க்கையை வாழத் துடித்த நம்மவர்கள் நம் தேசத்துக்காய் தமது உதிரம் சிந்தியதை எண்ணி இன்று வாழத்துடிக்கும் நமது உறவுகளுக்கு
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் உறவுகளே!
ஒன்றிணைந்து வாருங்கள்.

எமது பிரதேசத்தில் வாழும் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள் பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தினரும் பெரிய நீலாவணை இளைஞர்களும்.