தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய

சந்திப்பு ஒன்று நாளை (15) நடைபெற உள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை மாலை இடம்பெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் . ஏ சுமந்திரன் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சமஸ்டி அடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண்பதை இலக்காக கொண்டு, இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாரம் தமிழ்ப் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.