கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட கல்முனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அஹமட் அலி வைத்தியசாலையில் நிகழ்கின்ற பிறப்பு/இறப்புக்களை “கல்முனைக்குடி” பிரிவிற்குரிய பதிவாளரிடம் சென்று பதிவு செய்யுமாறு சேவை பெறுனர்களை அவ்வைத்தியசாலை நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் வைத்தியசாலையின் அமைவிடம் (Geo coordinates: 7.409440,81.829388) ஆகும். இதனை நில அளவைத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் உறுதி செய்யலாம்.

கல்முனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பது “கல்முனை நகர்” எனும் பதிவாளர் பிரிவினுள்ளடங்கும். மாறாக “கல்முனைக்குடி” எனும் பதிவாளர் பிரிவினுள் உள்ளடங்கப்படாது.

சட்ட ஏற்பாடுகளின் படி பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகிய நிகழ்வுகள் எந்த பதிவாளர் பிரிவினுள் இடம்பெறுகிறதோ அந்த பிரிவிற்கான பதிவாளரிடமே பதிவு செய்யப்பட வேண்டும். எனவே “கல்முனைநகர்” எனும் பதிவாளர் பிரிவினுள் இடம்பெறுகின்ற பிறப்பு அல்லது இறப்பு நிகழ்வொன்று “கல்முனைக்குடி” எனும் பதிவாளர் பிரிவினுள் பதிவு செய்யப்படுவதென்பது ஒரு “சட்டவிரோத செயற்பாடு” ஆகும்.

ஆகவே அஹமட் அலி வைத்தியசாலையில் இடம்பெறும் பிறப்பு/இறப்பு நிகழ்வுகள் “கல்முனை நகர்” எனும் பதிவாளர் பிரிவினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களத்தின் AM/LR/1/30 இலக்க 2022/08/18 திகதி கடிதம் ஊடாக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சட்ட ஏற்பாடு மற்றும் பதிவாளர் நாயக கட்டளை என்பவற்றை புறக்கணித்து தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் இந் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருகிறது.

எனவே பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் செயற்படுமாறும் குறித்த வைத்தியசாலையில் இடம்பெறும் பிறப்பு/இறப்புக்களை “கல்முனை நகர்” பிரிவுக்குரிய பதிவாளரிடம் சென்று பதிவு செய்து தங்கள் பதிவுகளின் “சட்டவலிதுடைமையை” உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
~ நன்றி ~
இப்படிக்கு
பொது அமைப்புகள்
[கல்முனை]

தொடர்புடையை செய்தி