அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!
-/அலுவக நிருபர்

கல்முனை நகர் பதிவாளர் பிரிவினுள் கல்முனைக்குடி பதிவாளரினால் நிருவாக அத்துமீறல்கள் இடம்பெறுவதாக பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கல்முனை 03 கிராமசேவகர் பிரிவில் இயங்கிவரும் அகமட் அலி தனியார் வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்புகள் தொடர்பான பதிவுகள் அவ்வைத்தியசாலை நிருவாகத்தின் பிழையான வழிநடத்தலின்கீழ் கல்முனைக்குடி பிரிவிற்குரிய பதிவாளரிடம் பதியபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வைத்தியசாலை அமைந்துள்ள (Geo Coordinates : 7.409440, 81.829388) பிரதேசம் கல்முனை நகர் பதிவாளர் பிரிவிற்குட்பட்டதாகும். இருந்தபோதும் கல்முனை பிரதேச செயலாளரின் (தெற்கு/முஸ்லிம்) வழிநடத்தலின்கீழே தாம் கல்முனைக்குடி பதிவாளரிடம் பதிவுகளை மேற்கொள்வதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

கல்முனை பிரதேச செயலாளரின் (தெற்கு/முஸ்லிம்) கல்முனை வடக்கு பிரதேசத்திற்குள்ளான பகுதிகளில் அத்துமீறிய நிருவாகச் செயற்பாடுகளில் பதிவாளர் திணைக்களம் தொடர்ந்தும் சட்டத்துக்கு முரணான விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் துணைபோகின்ற நிலையில்,

பதிவாளர் திணைக்களம் இத்தனியார் வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு இறப்புகளை இதற்கு உரித்தான “கல்முனை நகர்” பதிவாளர் பிரிவின்கீழ் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நியமத்திற்கு முரணாக அரசாங்க நடவடிக்கைகளை பிழையாக வழிநடத்தும் கல்முனை பிரதேச செயலாளருக்கு எதிராக (தெற்கு/முஸ்லிம்) நீதியான விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும், குறிப்பிட்ட சட்டத்திற்கு முரணான பதிவுகளை மேற்கொள்ளும் குறித்த பதிவாளர் பணியில் இருந்து இடைநிறுத்தப்படவேண்டுமெனவும் அவ் அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிள்ளது.

மேலும், வைத்தியசாலை நிருவாகம் பொதுவான அரச நிருவாகரீதியான நடமுறைகளை அறிந்து செயற்பட கடப்பாடுடையது என்கின்றவகையில் சட்டத்துக்கு முரணாக கல்முனை வடக்கு பிரதேச்தின் கீழ்வரும் கல்முனை நகர் பதிவாளர் பிரிவிற்குள் பதிவுசெய்ப்படவேண்டிய பதிவுகளை கல்முனை பிரதேச செயலாளரின் (தெற்கு/முஸ்லிம்) பிழையான வழிநடத்தலின்கீழ் தொடர்ந்தும் பதிவுசெய்யுமாயின் கல்முனை வடக்கு பிரதேச செயகப்பிரிவின்கீழ்வரும் அனைத்துப் பொதுமக்களும் இவ்வைத்தியசாலையின் சேவையை புறக்கணிக்குமாறு கோரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.