ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு!

தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தகைய முன்னெடுப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது