இலங்கை கிழக்கு மாகாணம், வெருகலம்பதி கஜவல்லி மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025.
நிகழும் மங்களமிகு விசுவாவசு வருடம் வைகாசிதிங்கள் 25 ம் நாள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை வளர் துவாசதசி திதியும் சுவாதி நட்ச்சத்திரமும் சித்த யோகமும் இணைந்த காலை 6:மணி52 நிமிடம் முதல் 10 மணி 15நிமிடம் வரையுள்ள மங்களகர சுபமுகூர்த்த வேளையில் எம்பெருமான் கஜவல்லி மஹாவல்லி சமேத முருகபெருமானுக்கும் ஏனைய பரிபார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் நிகழத் திருவருளும் குருவருளும் ஒருங்கே கைகூடியுள்ளது. எனவே அனைவரும் வருகைதந்து சித்திரவேலாயுதர் அருள் பெறுக.
கிரியாரம்பம் 05.06.2025 வியாழக்கிழமை , பாற்காப்பு – எண்ணெய்காப்பு06.06.2025 வெள்ளிக்கிழமை காலை 06.00 மணி முதல் , 07.06.2025 சனிக்கிழமை மாலை 06.00 வரை இரு தினங்கள் இடம்பெறும்.
மஹா கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணியளவில் கோலாகலமாக ஆலயத்தில் இடம்பெறும்