தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும்
இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.


யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல்
12.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன்,
க.நாவலன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில்
தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன்,
முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.


தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களைத் தொடர்ந்து இன்று
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலையில் உள்ள சபைகளில் ஆட்சியமைக்கலாம் என்று கூறிய நிலையில் தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டமையானது இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

You missed