பன்சேனை பாரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ” பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீடும் ” வித்தியாலய அதிபர் தேவப்போடி பவளசிங்கம் தலைமையில் கடந்த 12ம் திகதி புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது..

இந் நிகழ்விற்கான பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன், ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ சி.மு.சச்சிதானந்த குருக்கள் (கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்), விஷேட விருந்தினர்களாக.செல்வி.அகிலா கனகசூரியம் ( மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர்), திரு.சி.சுதாகர் (பிரதேச செயலாளர்,மண்முனை மேற்கு பிரதேச செயலகம்) மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், முன்னாள் கோட்ட கல்விப் பண்ணிப்பாளர்,பிரதேச சுகாதார பரிசோதகர், பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து அதிதிகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்…

அதி கஷ்ட்ட பிரதேசமாக விளங்கும் பன்சேனை கிராம பாடசாலையில் இத்தகு நிகழ்வு ஒன்று இடம்பெற்றமை வரலாற்றின் முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.