2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் தேயிலை அனைத்து ஏல விற்பனை நிலைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேயிலை விற்பனை

இதன்படி கிலோகிராம் ஒன்று சராசரியாக 1,599.49 ரூபாவாக விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் கடந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 557.38 ரூபாவாவுக்கு தேயிலை விற்பனை செய்யப்பட்டது.

செப்டெம்பர் மாதத்தில் பதிவான விலையானது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான விலையான 1,508.21 ரூபாவை விட அதிகமாக காணப்பட்டுள்ளது.

டொலரின் மதிப்பில் தேயிலை விலை

இந்த நிலையில் டொலரின் மதிப்பில், இலங்கை தேயிலையின் சராசரி விற்பனை விலை ஒரு கிலோகிராம் 4.41 டொலர்களாக இருந்தது.

2021இல் 550.93 ரூபாவுக்கு தமது தேயிலையை விற்பனை செய்த நடுத்தர உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டில் 1,336.96 ரூபாயைப் பதிவு செய்தனர்.

அதேநேரம் 2022 செப்டெம்பரில் தேவை குறைந்தவர்கள் 1,706.02 ரூபாயை எட்டியுள்ளனர்.

இது முந்தைய ஆண்டில் 621.17 ரூபாவாக இருந்ததாக முக்கிய தேயிலை ஏல நிறுவனமான சிலோன் டீ புரோக்கர்ஸ் தெரிவித்துள்ளது.