வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட திருக்கோவில் பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளையும் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெயரும் புகழும் ஈட்டித் தந்த இளம் கண்டுபிடிப்பாளர் இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் இன்னும் பல சர்வதேச போட்டிகளிலும் கராத்தே விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்த வீரர் பாலுராஜ் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றிய சிலர் உட்பட பலரை கௌரவிக்கின்ற நிகழ்வு நேற்றைய தினம் இந்த அமைப்பினுடைய ஆலோசகரும் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் மனித உரிமை சமூக செயற்பாட்டாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீபன் அவர்களுடைய தலைமையிலே கமு/திகோ/ மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்த விழாவிற்கு அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. திரு .தவராசா கலையரசன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ.திரு. கோவிந்தன் கருணாகரன் (ஜனா) மற்றும் கௌரவ. திரு. இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ. திரு .தியாகராஜா சரவணபவன் இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கௌரவ .திரு .கி. சேயோன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ. திரு.EW.கமல் ராஜன் திருக்கோவில் பிரதேச செயலாளர்.

திரு.த.கஜேந்திரன் மற்றும் பாடசாலை அதிபர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலயத் தலைவர்கள் சிவில் சமூகத்தவர்கள் விருதுகளை பெற்ற மாணவர்கள் வீரர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் என பலரும் இந்த நிகழ்விலே கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இந்த நிகழ்விற்கு பூரண அனுசரணை வழங்கியிருந்த மத்திய கிழக்கு நாடுகளிலே பணி புரிகின்ற எமது பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுக் கொண்ட இளைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்ற இந்த அமைப்பு எமது சமூகத்தின் விடிவிற்கான அடுத்த இலக்கு கல்விதான் என்பதை அடிநாதமாகக் கொண்டு கல்வியிலும் அதனோடு சார்ந்த துறைகளிலும் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவப்படுத்தி அவர்களுடைய கல்விக்கு உற்சாகமளிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் முயற்சியோடு மேற்கொண்ட பாராட்டத்தக்க இந்த செயல் நேற்றைய தினம் சிறப்பான முறையில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்று இருந்தது இந்நிகழ்வில் பேசிய அதிதிகள் இந்த அமைப்பின் மிகச் சிறப்பான இந்தச் சேவையைப் பாராட்டியதோடு அமைப்பின் தலைவர் திரு.கர்ணன் கனகரெத்னம் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.