காரைதீவில் நடைபெற்ற சுவாமி நடராஜானந்த ஜீயின் 59வது சிரார்த்த தினம் 

( வி.ரி. சகாதேவராஜா)

 இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது சிரார்த்த தினமான 18.03.2026  இன்று புதன்கிழமை  காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின் திருவுருவச்சிலையடியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது கொடியேற்றம் (துறவறகீதம்), பஜனை, பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்ஷரின் வேதபாராயணம் ,திருவுருவச்சிலைக்கு பூமாலை அணிவித்தலும், புஸ்பாஞ்சலியும் இடம்பெற்றதுடன் ,

சேவையின் சிகரம் சுவாமி நடராஜானந்தரின் அறுபத்துநான்கு வருட வாழ்க்கை சரித்திர பதாதை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன்,

சுவாமியின் திருவுருவச்சிலைக்கான குடைபதாதை திரைநீக்கம் செய்யப்பட்டது. 

அத்தோடு ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின்  நினைவாக பாடல் வெளியீடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் மங்களாராத்தி, தலைமையுரை, சிறப்புரை, மகிழ்வுரை என்பவற்றுடன் பிரசாதம் வழங்களுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.