எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தில் அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்டால் மின்வெட்டை நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

ஆனால் நிலக்கரி கொள்முதல் சாத்தியம் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.