பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று 01.10.2022 க/மு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை அதிபர் சிதம்பரப்பிள்ளை புனிதன் தலைமையில் உப அதிபர் வில்வராஜ் மற்றும் ஆசிரியை கோமதி மற்றும் ஏனைய அனைத்து ஆசிரியர் குழுவினரும் இணைந்து இந்நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.

இதன்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைக்கு வருகை தந்திருந்த சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன.

கஜனா சந்திரபோஸ்