ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள்

இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்

இந்த போராட்டமானது சுவிசர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.