நாளை (07) திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை  உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நாளை 07ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது .

தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் யூலை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறும்.அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

அன்றைய தினம் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன் செலுத்தும் முக்கியமான கிரியை அங்கு நடைபெறுவது வழமையாகும்.

இதேவேளை, திருவிழா தொடர்பான  அதிகாரசபைக்கூட்டம் பஞ்சாயத்து கூட்டம் மற்றும் பிரதேச செயலக முன்னோடிக் கூட்டம் என்பன நடைபெற்றுள்ளன.

இந்தவருடத்திற்கான ஆடிஅமாவாசை உற்சவம் நாளை 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி , 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.மறுநாள் 25 ஆம் தேதி பூங்காவனத்திருவிழா வள்ளி திருமணமும் நடைபெறும்.

 தொடர்ந்து மறுநாள் 26 ஆம் தேதி வயிரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில்   ஆலயகுரு சிவஸ்ரீ நீதி. அங்குச நாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறவுள்ளது என்று ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.