இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய திருக் கோவில் பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள், இளைஞர், யுவதிகளைக்கடத்தி காணாமலாக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கப்டன் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.