அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படும் என்று அதன் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்தார்.நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட அதிக விலையில் முட்டை விற்பனை செய்வோரை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.