கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 126 மாணவர்கள் செல்லவுள்ளார்கள்.

இவர்களுக்கான பாராட்டு விழா அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடந்த வாரம் வெளியான கா.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, பல்கலைக்கழகம் செல்லலாம் என்ற உத்தேசத்தில் இந்த 126 மாணவர்களும் பாடசாலை அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் உயிரியல் விஞ்ஞான துறையில் 20 மாணவர்களும், கணித பிரிவில் 24 மாணவர்களும், வர்த்தக பிரிவில் 30 மாணவர்களும், கலைப்பிரிவில் 31 மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 13 மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 8 மாணவர்களுமாக 126 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.