தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரச நிர்வாக சேவையில் இன பாகுபாடு காட்டும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்முனை 01 D பகுதியை சேர்ந்த காணிகளுக்கு அளிப்பு பத்திரங்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே காணி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டு இருந்தும் இதுவரையில் குறித்த மக்களுக்கான காணி அளிப்பு பத்திரத்தை கையளிக்காது, இன ரீதியில் அரச சேவையை கல்முனை தெற்கு பிரதேச செயலக நிர்வாகம் செய்துள்ளது. என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன் செல்வநாயகம் குறிப்பிட்டுள்ளார்

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள காணி அளிப்பை அடாத்தாக தான் பெற்று, அப்பாவி பொது மக்களுக்கான சேவையை உரிய முறையில் செய்யாது தமிழர் என்ற ஒரே காரணத்தினால் அரச சேவையை துஷ்பிரயோகம் செய்தமை மிக கண்டனத்துக்கு உரியது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் நிர்வாகத்தில் தலையீடு செய்து, மக்களுக்கான அரச சேவையை குழப்பி, மக்களை பிளவு படுத்தும் விதமாகவும் பிரதேச அரசியல்வாதியின் கைப்பாவையாக செயல்படும் அரச அதிகாரிகள், எதிர்காலத்தில் பொது மக்கள் நலனை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.