சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடிய இவர் தமிழ் புலமையால் தமிழர்களின் நெஞ்சங்களில் குடியிருந்தவர்.

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் பெற்றவர் நெல்லை கண்ணன்.. இவருக்கு வயது 77.. நெல்லை கண்ணன் ஏராளமான நூல்களை வாசித்து பலருக்கும் அதை கடத்திச் சென்றுள்ளார். பல மேடைகளில் அவர் அதை செய்திருக்கிறார். ஏராளமான தகவல்களை அவர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு தமிழ் நூல்களை கரைத்து குடித்த பெருமை அவருக்கு உண்டு. பல மேடைகளில் மாணவர்களை எப்போதுமே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக அவரது பேச்சு தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவர் காலமாகி இருக்கிறார் என்ற சோகமான செய்தி வந்துள்ளது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117