தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 112 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
இதற்காக அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தின் தலைவர் – பெரியநாயகி சிவராஜ், செயலாளர் – சுகதேவ் வேலாயுதம், பொருளாளர் – நடனசபேசன் முருகானந்தம், பாலமுருகன் சம்பந்தம், தினேஸ் கந்தசாமி, வசந்த் வல்வில் ஓரி, விஜயகுமார் மனோகரன் மற்றும் அங்கத்தவர்கள் இணைந்து இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தனர்.
இதனை New Sun Star Youth Club மற்றும் Friendly Ship Foundation இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.