ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்!

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் பதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

இதில் ஜனாதிபதி ரணில் உறுதியாக இருக்கிறார் என்று ஈழநாடு நாளிதழ் செய்தி கூறுகின்றது.

இந்த நிலையில் நாமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்க விட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை அவர் எம்.பியாகவே இருக்க வேண்டும்.
அவர் வெற்றி பெறாவிட்டால் அவரின் அரசியல் எதிர்காலம் நிச்சயமாற்றதாகிவிடும் என்று ஜனாதிபதியை சந்தித்த பெரமுன கட்சியினர் கவலை தெரிவித்தனர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதேவேளை தனக்கு அமைச்சு பதவியை தருமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று நாமல் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.