இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இந்த வாரமும் கார்களுக்கான 20 லீட்டர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

QR cord செயல் இன்று முதல் தானாகவே புதுப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.