16 – 20 வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது.

அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிய சட்ட திருத்தத்தின்படி, பாடசாலை மாணவர்களும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடாது என்றும் முறையான பயிற்சி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஆபத்தான வேலை வாய்ப்புகள் எழுபத்தி இரண்டு இருப்பதாகவும், அவற்றில் பணிபுரிய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதுஎன்றும் தொழிற்துறை அமைச்சு கூறியுள்ளது.

பகுதி நேர வேலைவாய்ப்பில், இ.பி.எஃப். மற்றும் ETF செலுத்தும் போது பிரச்னை ஏற்படுவதால், அதற்கான விதிகளிலும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.