கல்முனை வலயக் பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் சகதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து இவருக்கான நியமன கடிதம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

மருதமுனையைச் சேர்ந்த நஜீம் இலங்கை கல்வியில் நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியாவார்.

15 வருடக் கல்வி நிர்வாக சேவையில் உள்ள நஜீம் நாளை 10 ஆம் திகதி முதல் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளராக பதவி ஏற்கிறார்.

2007 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி இலங்கை கல்வியின் நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட அவர், கடந்த 2019 மார்ச் 12 ஆம் திகதி தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார்.