டிருக்சன்

சம்பத் வங்கி குழுமத்தின் நிதி நிறுவனமாகிய சியபத பினான்ஸ் நிறுவனமானது தனது 20ஆவது ஆண்டு நிறைவினை நாடு பூராகவும் பல்வேறுபட்ட வழிகளில் கொண்டாடி வருகின்றது. அந்த அடிப்படையில் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ரியாகுல் ஜன்னா பாடசாலையில் மரநடுகையுடன் சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சியபத பினான்ல் நிறுவனத்தின் கிழக்குப்பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் திரு.மொகமட் பிறிம்சாத், பிராந்திய முகாமையாளர் திரு.மொகமட் பாகிஸ், கல்முனை கிளை முகாமையாளர் திரு.மொகமட் முஜீப் மற்றும் கல்முனையில் சியபத கிளை ஊழியர்கள், கல்லூரி பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சியபத நிறுவனமானது தனது நிதி சேவையினோடு பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.