பாறுக் ஷிஹான்

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம் இருந்து இதற்கான நியமனக்கடிதத்தினை திங்கட்கிழமை(8) பெற்றுக்கொண்டார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE)இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பல வருட கால அனுபவத்தினை பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் என்பதுடன் ஏலவே சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை சேர்ந்த எம்.எஸ் சஹதுல் நஜீம் விஞ்ஞான பட்டதாரி என்பதுடன் விஞ்ஞான முதுமாணி கல்வி முதுமாணிப் பட்டங்களை பெற்றுள்ளார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி என்பதுடன் 15 வருட கல்வி நிர்வாக சேவை அனுபவத்தையும் கொண்டவராவார்.
இதற்கு முன்னர் காரைதீவைச் சேர்ந்த திரு புவனேந்திரன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

You missed