கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனையை சேர்ந்தவர் உயிரிழப்பு!

கல்முனையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்) கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று முன்தினம் கனடா நேரம் இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரனின் மைத்துனரான

இவர் கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 2000 ஆம் ஆண்டு வர்த்தக பிரிவு மாணவருமாவார்.

இறுதி கிரியை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்