தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் நாம் மீதம் வைக்க கூடாது. இவற்றுக்கு தீர்வு காண புலம்பெயர் வாழ் தமிழர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நீதி அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை முன்னகர்த்தியிருந்தேன்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்களுடன் சந்திப்பை ஏற்படு
த்தியிருந்தேன். பேசுவதற்காக அழைப்பு விடுத்திருந்தேன். சிலர் ரகசியமாக முதலில் பேசுவோம் என்றார்கள் எந்த விடயம் என்றாலும் வெளிப்படையாக பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்போம்.
இந்த அரசாங்கத்தை எவ்வாறான சூழ்நிலையில் பொறுப்பேற்றோம் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்போம் என்றார்