நாவிதன்வெளி பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் விசேட தேவையுடை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
நாவிதன்வெளி பிரதேசசபையின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கு உதவி வழங்குவதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயண்படுத்தி நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு.புவனரூபன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக கோழிகூடும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேசசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு குறித்த வாழ்வாதார உதவி பயணாளியான விசேடதேவையுடைய குடியிருப்புமுனை அன்னமலை02 கிராமத்தைச் சேர்ந்த வீரகுமாரன் சோமசுந்தரம் என்பவருக்கு வழங்கி வைக்கப்பட்டன.




