உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 51 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் நேற்று உத்தரவிட்டிருந்தார். 

நீடிக்கப்பட்ட விளக்கமறியல்

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்ற நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் பின்னர், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களுள் 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், அவர்களுள் 51 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 51 பேரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்கதக்கது.