( சகா)
இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையில் 32 வருகாலம் சேவையாற்றிய சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா (31) திங்கள் கிழமை ஓய்வு பெற்றார்.
இவர் SLTES-1 எனும் உயர்ந்த பதவியில் கிழக்கில் நீண்காலம் சேவையாற்றியுள்ளார்.
இவர் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் பிரதி அதிபராகவும்,அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராகவும்,அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரியில் பணிப்பாளரும்,தனது சேவையின் இறுதியின் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அதிபராக இருந்து ஓய்வு பெறுகின்றார்.
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் 1994ல் பட்டதாரி பயிலுனராக இணைந்து 1995ல் உதவி போதனாசிரியராக கடமையாற்றி 1999ல் இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவை மூன்றில் பதவியேற்றார்.
இவர் முகாமைத்துவ பட்டத்தை யாழ்பாண பல்கலைக்கழத்திலும்;(BBA),பட்டமேல் படிப்பை(PGDE) திறந்த பல்கலைக்கழத்திலும்,முகாமைத்துவத்தில் முதுமானி பட்டத்தினை(Mmgt) மிகிந்தலை ரஐரட்ட பல்கலைக்கழத்திலும்,இதழியல் டிப்ளோமாவை (Dip.in Journalism) தென் கிழக்கு பல்கலைக்கழத்திலும் பெற்றுள்ளார்

