( வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை உதவித் திட்டம் இன்று (24) திங்கள் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
அங்கு பூ மரக்கன்றுகள் மரக்கறி வகைகள் அதற்கான உர வகைகள் திரவ உரங்கள் பூச்சாடிகள் போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனைக்கும் விடப்பட்டது.
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இந்த பூமரக்கன்றுகள் அதற்கான உர வகைகள் பூச்சாடிகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ், மற்றும் சுவாமி உமாதீஸானந்தா ஜீ, சுவாமி ப்ரமயாணந்தா ஜீ ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மிசன் ஆர்வலர்கள் அபிமானிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









