துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது.

செல்லையா பேரின்பராசா .

துறைநீலாவணைக் கிராமத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி  ” துறைநீலாவணை வரலாறு” எனும் நூல் வெளியீடு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்  ஞாயிற்றுக் கிழமை 23.08.2026 துறைநீலாவணை மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் இந் நூலாக்கத்திற்கு முன்னோடியாகத் தொழிற்படும் ஓய்வு பெற்ற மாகாண கலாசார பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.

துறைநீலாவணைக் கிராமத்தின் சமூக முன்னோடிகளுள் ஒருவரும்,  புகழ்பூத்த அதிபருமான அமரர் சாமித்தம்பி சரவணமுத்துவின் நாமத்தில் நீண்ட காலமாக சமூகநலப் பணியாற்றிரும் ” அமரர் சரவணமுத்து அறக்கட்டளையின் ” நிதிப்பங்களிப்பில் இந்  நூலுருவாக்கம் இடம்பெற்று வெளியிடப்படவுள்ளது.

இதற்கமைய இந் நூலின் பொருளடக்கம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல்  கூட்டத்தில் துறைநீலாவணையைச் சேர்ந்த பல்துறை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்ததுடன் துறைநீலாவணை மண்ணுக்கு புகழீட்டித் தந்த சாஹித்தியமண்டல விருதினைப் பெற்றவருமான ” வரலாற்று ஆய்வாளர் ” சாமித்தம்பி திருவேணிசங்கம் அவர்களிடம் இந் நூலை எழுதும் பணியை யாவரும் ஏகோபித்து ஒப்படைத்துள்ளனர்.