விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 48வது வருடாந்த தீமிதிப்புத் திருச்சடங்கு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, 28ஆம் திகதி தீமிதிப்புடன் நிறைவுபெறவுள்ளது.
இதன்படி, 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணி முதல் 10.33 மணி வரையில் கடல் தீர்த்தம் எடுத்தல் மற்றும் ஆலயக் கதவு திறத்தல் இடம்பெறும்.
விசேஷட நிகழ்வாக 23 ஆம் திகதி அம்மனுக்கு திருப்பொன்னுருக்கல் வைபவம் காலை 7.45 முதல் 8.45 மணிவரை இடம் பெறும்
24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் விசேட பூசைகள், திருச்சடங்குகள் மற்றும் ஊர்வலங்கள் இடம்பெறவுள்ளன. 27ஆம் திகதி இரவு தீ மூட்டும் நிகழ்வும், சக்தி ஊர்வலமும் நடைபெறும்.
28.08.2026 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மஞ்சள் குளித்தல், தீமிதிப்பு மற்றும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் 12.00 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பூசைகள் இடம்பெறுவதுடன், பக்தர்களுக்காக தினமும் மதிய வேளையில் அன்னதானமும் வழங்கப்படும்.
பக்த அடியார்கள் உற்சவ நிகழ்வுகளில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.





