குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளுக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
