வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள் மற்றும் தொழில் தேடுபவர்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள “Divisional Job Fair – 2026” வேலைவாய்ப்பு கண்காட்சி 2026 ஜூலை 28 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் மூலம் வேலை தேடுபவர்கள் முன்னணி நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஆராயும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பின்வரும் சேவைகள் வழங்கப்படவுள்ளன:

  • இணையவழி வேலை தேடுபவர் பதிவு
  • தொழில் வழிகாட்டல் சேவை
  • உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்
  • தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்கள்
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல்
  • சுயதொழில் வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள்
  • தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்

வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.