சுவாமி விபுலானந்தரின் 79 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,
அவர் தமிழிற்கும் சைவத்திற்கும் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவித்து பல நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளையில், திரு ஞானமுத்து அஜந்தா அவர்களின் நிதி அனுசரனையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, விபுலானந்தா வீதியில், வாழைச்சேனை, புதுக் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில்
புதிய நினைவிட சிலை அங்குரார்ப்பண நிகழ்வு 19/07/2026 அன்று இடம்பெற்றுள்ளது.
இந்திகழ்விற்கு கௌரவ அதிதிகள், சிறப்பு அதிதிகள் என பல பிரமுகர்களும்,
பொது அமைப்பினரும், உயர் அதிகாரிகளுடன் பொதுமக்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இச் சிலை நிறுவலின் ஏற்பாட்டாளர்களாக திரு.இ.கலைப்பிரியன் (அதிபர்), திரு.க.கமலேசன் (ஆசிரியர்) ஆகியோரும் பங்கு கொண்டு செயற்பட்டமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.

















