சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.


டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி போலி லொத்தர் பரிசுகள், உடனடி கடன் வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதாக கூறி பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அறிமுகமில்லாத இணைப்புகளை திறப்பது, பலவீனமான கடவுச்சொற்களை பயன்படுத்துவது மற்றும் வங்கி தொடர்பான தனிப்பட்ட தகவல்களை பிறருடன் பகிர்வது போன்றவற்றை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இவ்வாறான இணைய மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கணினி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது