தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு அதிகரிப்புக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்தியாவில் இருக்கும் தேர்தல் கொள்கை வகுப்பாளர்களால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.