ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எமது அதிகாரிகளுடன் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்றார்.
இதேவேளை இன்று காலை இலங்கை நேரம் 6.30 மணியளவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம் ஆற்றிய விசேட உரையில் இன்னும் ஒர் இரண்டு வாரங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் என்று பல்வேறு விடயங்கள் அடங்கலாக குறிப்பிட்டிருந்தார்.
